Home செய்திகள் தமிழக அரசை கண்டித்து தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யாததாலும், ஒரு கிலோவுக்கு ரூ.5200 லிருந்து ரூ.5800 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்தது. ஆனால், மாநில அரசு ஒரு கிலோவுக்கு 2900 -ல் இருந்து ரூபாய் 4000 நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தில் ஏற்படுகிறதுபருத்தி விலையை முழுமையாக நிர்ணயம் செய்யாமல் பருத்தி கமிட்டி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையிலும் மற்றும் மாநில விவசாய அணி செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், சத்யேந்ததிரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருள்செல்வன், ஜெகவீரபாண்டியன், சத்யசீலன், சித்திக், முன்னாள் அமைச்சர் மதியழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அமைப்பாளர் வழக்கறிஞர் ராம.சேயோன் மற்றும் நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!