Home செய்திகள் மகளிர் சுய உதவிக் குழுவினர் பணம் கட்டவில்லை என்றால் ஆதார் – ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் சிறு கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் மிரட்டல்

மகளிர் சுய உதவிக் குழுவினர் பணம் கட்டவில்லை என்றால் ஆதார் – ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் சிறு கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் மிரட்டல்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காழியப்பநல்லூர் ஊராட்சி தொடரிப்பேட்டை கிராமத்தில் சிறுகடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தரங்கம்பாடி அடுத்த தொடரிபேட்டை கிராமத்தில் பெரும்பாலானோர் தினக்கூலி மற்றும் விவசாயிகள் உள்ளனர். காவிரி டெல்டா கடைமடை பகுதியான. தொடரிபேட்டை கிராம மக்கள் மேட்டூர் அணையின் நீரை நம்பி ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர் . இதனால் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.நிலையில் குரோனா நோய்த் தொற்றால் அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் முற்றிலும் வேலை வாய்ப்பில்லாமல் சிரமப்பட்டு வரும் கிராம மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பால் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்தமகளிர் சுய உதவிக் குழுவினர் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் சிறு கடன் பெற்று மாதந்தோறும் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.இதனால் தனியார் நிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மகளிர் சுய உதவிக்குழுவினர்,மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய கடன் தொகையை வரும் ஆகஸ்டு 31. வரை வசூலிக்க கூடாது என்ற அரசு ஆணையை பிறப்பித்துள்ளது.

இதனை கண்டுகொள்ளாத தொடரிபேட்டை கிராமத்தில் சிறு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் எல்என்டி, சமஸ்தா, கிராமவிடியல், எக்விடாஸ் தனியார் நிறுவனங்கள் அரசு உத்தரவை மீறி அதிரடி வசூல் வேட்டையை துவங்கியுள்ளது.சில தனியார் நிறுவனங்கள் பணம் கட்டவில்லை எனில் உங்களின் ஆதார் கார்டுகள் மற்றும் ரேஷன் கார்டுகள் ஆகியவற்றை முடக்கி விடுவோம் என்றும் கடன்வாங்க முடியாதவாறு சிபில் போட்டு விடுவோம் என்றும் மகளிர் சுயஉதவி குழுவினரை மாதந்தோறும் மிரட்டி வருகின்றனர்.இதுகுறித்து தொடரிபேட்டை கிராம மக்கள் மேற்கண்ட நிறுவனங்களுக்கு உடனடியாக அரசு உத்தரவு வழங்கி கடனை தற்போதைக்கு வசூலிக்கக் கூடாது என்ற நிலைமையை நடைமுறைப்படுத்த வேண்டுமாறு தரங்கம்பாடி வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!