பரபரப்பாக நடைபெற்ற பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது. இதில் இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் இரு வாரங்கள் அதிகாரிகள் வரமாட்டார்கள் என விவசாயிகள் மத்தியில் பரபரப்பாக பேசபட்ட நிலையில், இந்திய பருத்தி கழக அதிகாரிகள் ரமேஷ், ஆனந்தன் கலந்து கொண்டு அதிக அளவில் பருத்தியை கொள்முதல் செய்தனர்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பி.மா பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் சுமார் 3000 மூட்டைகளை விவசாயில் கொண்டு வந்து இருந்தனர். இதில் இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் சுமார் 2500 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. வெளி வியபாரிகள் அதிக பட்ச விலை 4372. இந்தியபருத்தி கழகம் சார்பில் அதிகபட்ச விலை 5450 ஏலம் போனது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..