62
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காமாட்சி அம்மன் கோயில் காட்டு நாயக்கர் பகுதி உள்ளது. இங்கு இன்று காலை 10.30 மணி அளவில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமி விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர் . இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரித்தனர். அப்பகுதியினர் கூறுகையில் ஓ என் ஜி சி நிறுவனம் திருப்புல்லாணி வட்டாரம் வலையனேந்தல் பகுதியில் எரிவாயு உள்ளதா என கள ஆய்விற்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் துளை இடுவதால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றனர்
You must be logged in to post a comment.