Home செய்திகள் கொரோனா பரிசோதனைக்கு  தானாகவே முன்வந்த நபர்களை கூட ஊடகங்கள் மூலமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என விளம்பரம் செய்தது ஏன்?

கொரோனா பரிசோதனைக்கு  தானாகவே முன்வந்த நபர்களை கூட ஊடகங்கள் மூலமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என விளம்பரம் செய்தது ஏன்?

by Askar

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த நபர்கள் மீதான கொரோன பரிசோதனை செய்த மருத்துவ சான்று குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம்  விளக்கம் கொடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தொலைக்காட்சி மற்றும் அச்சு  ஊடகங்கள் மூலமாக  வலியுறுத்துகிறோம்..

சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் 31-03-2020 முதல் இன்று வரை கொரோன பாதித்த நபர்களின் எண்ணிக்கை மட்டுமே ஊடகங்கள் மூலமாக சொல்கிறார் அதாவது 31-03-2020 அன்று டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1131 பேரில் 523 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றார் …

01-04-2020 அன்று டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1131 பேரில் 190 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றார்

02-04-2020 அன்று டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 264 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றார்

03-04-2020 அன்று கொரோன பாதித்த 102 பேரில் டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றார்

04-04-2020 அன்று கொரோன பாதித்த 74 பேரில் டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 73 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றார்

05-04-2020 அன்று கொரோன பாதித்த 86 பேரில் 85 பேர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றார்

06-04-2020 அன்று கொரோன பாதித்த 50 பேரில் 48 பேர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றார்

07-04-2020 அன்று கொரோன பாதித்த 69 பேரில் 63 பேர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று கூறிய சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1131 பேரில் 961 பேருக்கு கொரோன பாதிப்பு இல்லை என்கிறார் ..

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஊடகங்கள் மூலமாக சுகாதாரத்துறை செயலாளர் சொன்னது ஊடகங்களில் வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன ..

மொத்த எண்ணிக்கை 1131 இதில் 961 கொரோன இல்லை என்றால் மீதி 170  பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றால் அவர்கள் யார் யார் ? தினமும் சுகாதாரத்துறை செயலாளர் ஊடகங்கள் மூலமாக சொன்ன கணக்கு படி பார்த்தால் 633 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என்றாரே அது என்ன கணக்கு ?

இது போன்ற ஏற்ற இரக்கம் மிகுந்த தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சென்னை பீக்னிஸ் மஹாலில் அங்கே வேலை செய்யும் நான்கு பேருக்கு கொரோன கண்டறியப்பட்டது என செய்திகள் வந்ததே அந்த நேரத்தில் பீக்னிஸ் மஹாலுக்கு வந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொரோன பரிசோதனை முகாமுக்கு கொண்டு செல்லாதது ஏன் ? அவர்கள் மூலம் கொரொன பரவினால் தவறில்லையா ?

கடந்த பிப்ரவரி 10 ந் தேதி முதல் அமெரிக்க உட்பட பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகம் வந்தார்களே அவர்களை எல்லாம் கொரோன பரிசோதனை முகாமுக்கு கொண்டு செல்லாதது ஏன் ? வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் வீட்டில் மட்டும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினால் போதுமா ? அதே போன்ற எச்சரிக்கை நோட்டீஸை டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் வீடுகளிலும் ஒட்டி இருக்கலாமே அதை செய்யாமல் கொரோன பரிசோதனைக்கு  தானாகவே முன்வந்த நபர்களை கூட ஊடகங்கள் மூலமாக கொரோன உறுதி செய்யப்பட்டவர்கள் என விளம்பரம் செய்தது ஏன் ?

அதே போன்று ஜக்கி வாசு தேவ் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் உட்பட அனைவருக்கும் கொரோன பரிசோதனை செய்யப்பட்டதா ? இல்லையா ?

ஆக தப்லீக் ஜமாஅத் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோன தொற்று என்று சொல்வதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் கொரோன வைரஸ் சமூக பரவல் இல்லை என்பது மக்களுக்கு  தைரியம் கொடுக்க தப்லீக் ஜமாஅத் மீது முரணாக கருத்து கூறி பழி சுமத்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை ..

கொரோன வைரஸ் தொற்று நோய்கள் மட்டுமில்லை எந்த நோயாக இருந்தாலும் யாரும் மறைக்க மாட்டார்கள் அவரவர் உயிருக்கு பயந்து மருத்துவ பரிசோதனை செய்வதில் முன் நிற்பார்கள் என்கிற அடிப்படை கூட தெரியாமல் சிலர் தப்லீக் ஜமாஅத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என தவறான பிரச்சாரம் செய்வது முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை காட்டுகிறது ..

அதே போன்று கொரோன வைரஸ் இருந்தால் தும்மல் , தொடர் இரும்பல் , காய்ச்சல் , அசதிகள் போன்ற நிறைய  அறிகுறியாக இருக்கும் என ஊடகங்களில் மருத்துவர்கள் சொல்கிறார்கள் அந்த அடிப்படையில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த யாருக்கும் அது போன்ற அறிகுறிகள் இல்லை என்றாலும் பொது சமூகத்தின் நலன் கருதி கொரோன பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பது உண்மை ஆகையால்

இதுவரை தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த  எத்துணை பேர் கொரோன பரிசோதனை தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் சான்று ஆகியவை அந்தந்த நபர்களின் குடும்பத்தினரிடம் காட்ட வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்

அன்புடன் தடா ஜெ அப்துல் ரஹிம் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!