Home செய்திகள் குற்றாலத்தில் தமிழக கேரள போலீஸ் ஆலோசனை கூட்டம்-அத்தியாவசிய பொருட்கள்தடையின்றி கிடைக்க நடவடிக்கை..

குற்றாலத்தில் தமிழக கேரள போலீஸ் ஆலோசனை கூட்டம்-அத்தியாவசிய பொருட்கள்தடையின்றி கிடைக்க நடவடிக்கை..

by Askar

குற்றாலத்தில் தமிழக கேரள போலீஸ் ஆலோசனை கூட்டம்-அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை..

கொரோனா‌ வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வது தொடர்பாக குற்றாலத்தில் எல்லையோர மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு 144 தடை உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையே பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வது மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் தொற்று அபாயம் காரணமாக வாகனங்களை அனுமதிப்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று குற்றாலம் திருவிதாங்கூர் திவான் பங்களாவில் தமிழக மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள எல்லையோர மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருவனந்தபுரம் டிஐஜி சஞ்சீவ் குமார், கொல்லம் எஸ்பி ஹரிசங்கர், தென்காசி எஸ்பி சுகுணாசிங், தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தனிப் பிரிவு எஸ்பி வினோத், தென்மலை இன்ஸ்பெக்டர் விஸ்வம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தென்காசி எஸ்பி சுகுணா சிங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களின் எல்லையோர பகுதியாக உள்ள தென்காசி – கொல்லம் மாவட்டங்கள் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக இரு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டு இருந்தது. அதுபற்றி திருவனந்தபுரம் காவல்துறை டிஐஜி தலைமையில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்குப் போக்குவரத்து அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு எவ்வாறு முன்னுரிமை கொடுப்பது, காலதாமதத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தென்காசி கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் ஆகியோர் தங்களுக்குள் இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தடையின்றி நடக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தென்காசி எஸ்பி சுகுணா சிங் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!