Home செய்திகள் கொரோனா தடுப்பு பணிகளில் சிறந்த பங்களிப்பு-ஊர்க்காவல் படையினர் பணி நிரந்தரம் எப்போது..?

கொரோனா தடுப்பு பணிகளில் சிறந்த பங்களிப்பு-ஊர்க்காவல் படையினர் பணி நிரந்தரம் எப்போது..?

by Askar

கொரோனா தடுப்பு பணிகளில் சிறந்த பங்களிப்பு-ஊர்க்காவல் படையினர் பணி நிரந்தரம் எப்போது..?

காவல் துறையினருக்கு உதவியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினரின் பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு, இரவு ரோந்து பணி, விஐபிகளின் வருகையின் போது பாதுகாப்பு பணிகளில் ஊர்க்காவல் படையினர் காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வருகின்றனர். காவல் துறைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு சீருடையுடன் பணியில் ஈடுபடும் இவர்களுக்கு தமிழகத்தில் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு பணி நாட்களில் மட்டுமே ரூ 560 வீதம் மாதம் ரூ 2800 மட்டும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

வேலை இல்லாத நாட்களில் பிற பணிகளில் ஈடுபட்டாலும் திடீர் அழைப்பு வந்தால் செல்ல வேண்டியதிருப்பதால் அதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல் தவிக்கின்றனர். அதிலும் தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினை நிறைவேற்ற காவல்துறையினருங்கு உதவுவதில் இவர்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. ஊரடங்கு துவக்கத்தில் இருந்து ஊர்க்காவல் படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் பிற நாட்களில் மீண்டும் மாதத்தில் 5 நாட்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் நிலை உள்ளது.

ஏற்கனவே காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் காவல்துறையில் இளைஞர் காவல்படையினரை பணியில் அமர்த்தியது போல் ஊர்காவல் படையினருக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் தினமும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சுமார் 14708 பேர் பணியாற்றி வருகிறோம்

எங்களுடைய பணிகள் போக்குவரத்து சீர் செய்தல், கோவில் திருவிழா பாதுகாப்பு பணி, இரவு ரோந்து பணி, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் பாதுகாப்பு பணி, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணி, தேர்தல் பணி, முக்கிய பண்டிகைகள் , பேரிடர் மீட்பு பணி, முக்கியமாக தலைவர்களின் வருகையின் போது சாலை பாதுகாப்பு பணி போன்ற பணிகளை காவல் துறையினரோடு சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்து வருகிறோம். மகிழ்ச்சியை உரித்தாக்குகிறோம்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் கண்ணியத்தோடு பணியாற்றும் எங்களுடைய மாத வருமானம் தற்போது ரூ.2,800/- மட்டுமே. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் எங்களின் வறுமையை கண்டு எங்களுடைய கஷ்டங்களை போக்கும் வண்ணம் எங்களுடைய பணித் தொகையை ரூ.75/- லிருந்து ரூ.150/- ஆக உயர்த்தியது பெருமை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசை சாரும்.நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மற்ற மாநிலங்களில் குறிப்பாக பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணி புரியும் ஊர்க்காவல் படையினருக்கு ஊதிய உயர்வு செய்து மாதம் ரூ.18,000/- லிருந்து ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எங்களுடைய மாத வருமானம் ரூ.2,800/- மேல் உயர்த்தப்படவில்லை. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் பணி செய்து வருகிறோம்.

01.10.2017 ஆம் ஆண்டு கடந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படை நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.7,500/- வழங்கப்பட்டது. பின்பு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இவர்களின் குடும்ப வறுமையும் கஷ்டத்தையும் உணர்ந்து 1 வருடம் பணிக்கு பின் அவர்களுக்கு பணி நியமனம் செய்து ( தமிழ்நாடு சிறப்பு காவல் படை) அவர்களை வாழ்வில் ஒளி ஏற்றியது போல், தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் கடந்த 57 வருடங்களாக சிறப்பாக பணி செய்து வருகிறோம், ஆகையால் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினரின் கஷ்டத்தையும், வறுமையும் கருத்தில் கொண்டு எங்களுடைய வாழ்விலும் ஒளி ஏற்றிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மற்றும் துணை முதல்வர் ஐயா அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு எங்களுடைய கோரிக்கைளை பல முறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பலனில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மற்றும் துணை முதல்வர் ஐயா தாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு வருகை தரும்போது பணியில் இருக்கும் நாங்கள் எங்களுடைய எதிர்கால வறுமையை போக்கும் வகையில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அறிவிப்பு தருவீர்கள் என்று ஏக்கத்தோடு காத்துக்கொண்டு பணி செய்கிறோம். எனவே நாங்கள் நேரடியாக எங்கள் கஷ்டங்களை தாங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

தற்போது 144 உத்தரவு தடுப்பு கொரானா பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவரும் தங்களுடைய உயிரை துச்சமென நினைத்து மிகவும் கடுமையாக பணியாற்றி வருகிறோம். கொரானா பாதுகாப்பு பணிக்கான நாளொன்றுக்கு ரூ.150/ உணவுப்படி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மற்றும் துணை முதல்வர் ஐயா அவர்களுக்கும் உயர்திரு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் பணிபுரியும் நாங்கள் தமிழக காவல் துறையோடு இணைந்து கண்ணியத்தோடு செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக காவல் துறைக்கும் கடமை உணர்வோடு பணியாற்றி பெருமை சேர்ப்போம் என்று உறுயளிக்கின்றோம்.

ஊர்க்காவல் படையினராகிய எங்களை மாதம் முழுவதும் பணியமர்த்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!