![IMG-20170218-WA0026[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/02/IMG-20170218-WA00261.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரையில் நேற்று 17.02.17 இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர், மாவட்ட மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீட்டு பிரிவு ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞர் சேக் இப்ராகீம் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அரசின் நலத் திட்டங்களை அறியாமல் இருந்து வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கான சட்ட விதிமுறைகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்களும் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு பைசா வாங்காமல் மாற்றுத்திறனாளிகளுக்காக வழக்கு நடத்தி அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்து கொடுக்க எங்கள் வழக்கறிஞர் டீம் தயாராக உள்ளது. எவருக்கேனும் சட்ட ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு தெரிவித்தார்
You must be logged in to post a comment.