கீழக்கரையில் கிராம அலுவலர்கள் விடாத மழையிலும் அயராத போராட்டம் ..

கீழக்கரையில் இன்று (29/11/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்வதையும் பொருட்படுத்தாது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் கீழக்கரை வட்ட தலைவர் கருப்பையா, வட்ட செயலாளர் தமிழ்செல்வன், வட்ட பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 Trackback / Pingback

  1. கீழக்கரை, திருவாடானை மற்றும் பல பகுதியில் நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் .. - NEWS WORLD - www.keel

Comments are closed.