சாக்கடையில் மிதக்கும் கீழக்கரையில் உள்ள முக்கிய தெரு …

கீர்த்திமிகு கீழக்கரை என்பது சில பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது போல் பல பகுதிகளில் சாக்கடை நீர் பிரச்சினை என்பது தீராத நிரந்தர பிரச்சினையாகவே உள்ளது.  சமீபத்தில் பல அறிவிப்புகளுடன் கீழக்கரை பொறுப்பில் இருக்கும் ஆணையரின் ஆய்வும் பல ஆராவாரத்துடன் நடைபெற்றது.  ஆனால் கடந்த சில வாரங்களாக தம்பி நெய்னா பிள்ளை தெருவில் புகுந்து ஓடும் சாக்கடை நீர் ஆணையரின் கண்ணில் படாதது மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் கடந்த பல வாரங்களாக பிரதான தெருவில் உள்ள சாக்கடை முடியில் இருந்து மக்கள் வசிக்கும் தெருவில் ஓடி வரும் சாக்கடை நீராகும்.

ஒவ்வொரு தடவையும் சமூக ஆர்வலர்களும், அத்தெரு மக்களும் நகராட்சியின் பார்வைக்கு பிரச்சினைகளை கொண்டு சென்றால் மட்டுமே தீர்வு என்றால், தெரு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர்களின் பணி என்ன???… அவர்கள் எதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நகராட்சி நிர்வாகம் தெளிவு படுத்துமா??