சாமானியர்கள் உதவியுடன் கீழக்கரையை சுற்றுலா தளமாக்கும் முயற்சியில் “KILAKARAI TOURISM”..

கீழக்கரை பல் வேறு சமுதாய மக்களும் சேர்ந்து வாழ்ந்து வரும் பகுதியாகும்.  ஒரு கால கட்டத்தில் கீழக்கரையின் வளர்ச்சி ஒரு பகுதி மக்களை சார்ந்தது என்ற நிலையில் இருந்தது, பின்னர் கீழக்கரை வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட பல இளைய சமுதாயமும், சமூக ஆர்வலர்களும், இயக்கங்களும் பல் வேறான முயற்சிகளை கீழக்கரையின் வளர்ச்சிக்காக செய்து வருகின்றனர்.

இதன் வரிசையில் கீழக்கரையில் பல் வேறு சிறு சிறு வளர்ச்சி பணிகளை செய்து வந்த அரசால் சுற்றுலாக் துறையால் அங்கீகரிக்கப்பட்ட “KILAKARAI TOURISM” எனும் நிறுவனம், கீழக்கரையின் வளர்ச்சிக்கு பல சிறு மற்றும் பெறு வளர்ச்சி திட்ட வரைவுகளுக்கு அனுமதி பெற்று அதை செயல்படுத்தும் பணியை தொடங்கியுள்ளார்கள்.

அதன் முதற்கட்டமாக கீழக்கரை நகரை தூய்மை படுத்துதல், செடிகள் நடுதல் மற்றும் அவசியமான இடங்களுக்கு குப்பைத் தொட்டி வைத்தல் போன்ற பணிகள் செய்ய ஆயத்தமாகியுள்ளனர்.

இதன் முதற்கட்ட பணிக்கு இபுராஹிம் மெடிக்கல், டிராவல் ஜோன் போன்ற நிறுவனங்கள் பொருளாதார உதவிகள் செய்ய முன் வந்துள்ளன. இதற்கான அடுத்த கட்ட பொருளாதார உதவிகளை அனைவருடைய பங்களிப்பு இருக்கும் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் இயன்ற அளவு உதவி செய்யுமாறு கீழக்கரை பொது மக்களுக்கு KILAKARAI TOURISM நிறுவனத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சம்பந்தமான மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்:-