வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மீது அக்கறை கொள்ளும் கேரளா மாநிலம்… அமீரகத்திற்கு வேலைக்கு செல்ல நற்சான்றிதழ் பெற அலுவலகம் அமைத்தது…

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து பணிபுரிய செல்பவர்கள் காவல்துறையிடம் இருந்து நற்சான்றிதழ் பெற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் புதிதாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்தியில் ஏராளமான கேள்விகளும் குழப்பங்களும் ஏற்ப்பட்டது.  இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் விதமாக கேரளா மாநில் அரசு ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் இதற்கான பிரத்யேக காவல்துறை அலுவலகத்தை திறக்க உள்ளது அறிவிப்பு வெளியுட்டுள்ளது.

இது சம்பந்தமாக திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரி ஜமால் ஹுசைன் அல் ஜாபி கூறுகையில், இது சம்பந்தமாக கேரளா அரசாங்கத்திடம் இருந்து முறையான தகவல் வந்துள்ளது என்பதையும் உறுதிபடுத்தினார்.

இத்தகவலை கேரளா மாநில காவல் துறை உயர் அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்னளர். இந்த சான்றிதழ் பெற மாவட்டங்களில் உள்ள காவல் துறை அலுவலகங்களில் அதற்கான பிரத்யேக விண்ணப்பத்தை இந்தியா ரூபாய்.1000.00 செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் விண்ணப்பித்து சில தினங்களில் கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரி கூறுகையில், இதே போன்று இன்னும் நான்கு இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களிலும் அலுவலகம் தொடங்க உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இது வரை எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை என்றார்.

கேரளாவிற்கு சமமான தமிழக மக்கள் அமீரகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இவ்வாறு ஒரு அறிவிப்பு அமீரகத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்ற விசயம் ஆட்சியாளர்களுக்கு தெரியுமா என்பதே ஒரு கேள்வி குறிதான்..

News Source:- Gulf News..