இராமநாதபுரத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ ஆவேச பேட்டி.. வீடியோ..

கடந்த மாதம் பசும்பொன் தேவர் குருபூஜைக்கு மரியாதை செலுத்த வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று அதிமுக சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

அவ்விடத்திற்கு அக்.30இல் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தூண்டுதல் பேரில் அதிமுக பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டதாக டிடிவி தினசரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது கமுதி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் சிறையில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் பரமக்குடி கீர்த்திசேதுபதி, மாணவரணி செயலாளர் கவின் ஆகியோரை திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப் படை நிறுவனர் கருணாஸ் இன்று (12/11/2018) மதியம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதில் கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion