பேச்சு போட்டியில் கண்ணாடி வாப்பா பள்ளி பல பரிசுகள் வென்றது..

தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் 28.01.2018  அன்று கலை வாழ்வுடன் சேர்ந்த பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இது 4-வது கலை விழாவாக மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் தமிழ் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும பெற்று சாதனை படைத்தனர். ரிதுவான் (7-ம் வகுப்பு) முதல் பரிசையும், தாரிஃப் (9-ம் வகுப்பு) இரண்டாம் பரிசையும், அஹமது பயாஸ் (7-ம் வகுப்பு) மூன்றாம் பரிசையும் வென்றனர். கதை சொல்லும் போட்டியில் ஜைனப் லினா (2-ம் வகுப்பு) முதலிடமும், ஃபாத்திமா ஹஸிகா (2-ம் வகுப்பு) இரண்டாமிடமும் பெற்றனர். ஓவியப் போட்டியில் ஃபரா (3-ம் வகுப்பு) முதலிடமும், வண்ணம் தீட்டுதல் போட்டியில் சபர்னிகா (எல்.கே.ஜி) இரண்டாமிடமும் பெற்றனர். கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் பரிசுகள் வழங்கினார்.
அப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களையும், ஆர்வத்துடன் திரளாகக் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவரையும் பள்ளி முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன், மேலாளர் அபுல் ஹசன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.