அரசியல் பணியில் வேகம் காட்டும் கமல்ஹாசன்.. நாளை கட்சி அறிமுக விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு??..

கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சினிமா நடிகர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர். யார் முதலில் என்ற கேள்வி எழுந்த நிலையில் கமல்ஹாசன் நாளை (21-02-2018) மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் புதிய கட்சி மற்றும் அதன் கொள்கையை அறிவிக்க உள்ளார். இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இச்சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலை சந்தித்து விட்டு “இணைந்து செயல்படுவது பற்றி காலம் பதில் கூறும்” என்று பேட்டியளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கமல், ரஜினிக்கும் அறிமுக விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் தேமுதிக தலைவர் விஜயாந்த் மற்றும் அரசியல் கட்சி அனுபவம் வாய்ந்தவர்களான பாக்கியராஜ் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.