Home செய்திகள் கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்

கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கிராமங்களில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனா்.. சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வு பயணத்தில் கிராமசபை , தகவல் அறியும் உரிமை சட்டம், சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆகியவற்றிற்கு இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது..மேலும் சமூக வலைதளங்களில் கிராம சபை சார்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.இதன் விளைவாக 15-08-2019 சுதந்திரதினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் இளைஞர்களை பெருமளவில்  காண முடிகிறது.இராமநாதபுரம் மாவட்ட அளவில்  நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் பாதை தோழர்கள் கலந்து கொண்டு நிறைவேற்றிய தீர்மானங்கள்:

முக்கிய தீர்மானங்களாககண்மாய் தூர்வாறுதல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பனை விதை நடுதல், சாலை அமைத்து தருதல், ஊரணிக்கு படித்துறை அமைத்து தருதல் , பாலம் அமைத்தல், குடிதண்ணீர் தொட்டி அமைத்தல், பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்குதல் , மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் , ரேசன் கடைகளில் பொருட்களை சரியாக விநியோகம் செய்யவும், பேருந்து வசதி செய்து தரவும், மின் கம்பங்களை சரி செய்யவும், கடற்கரையில் பூங்காவை திறக்கவும் தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

இராமநாதபுரம் ஒன்றியத்தில் உள்ள கழுஊரணி கிராமத்தில் இராமநாதபுரம் மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் ,சித்தார்கோட்டை ஊராட்சியில் இராமநாதபுரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தினேஷ், தேவிபட்டினம் ஊராட்சியில் தேவிபட்டினம் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் உலகுராஜ் புத்தேந்தல் ஊராட்சியில் சதிஸ்  கிராம சபையில் கலந்து கொண்டனர்.

இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் தும்படைக்காகோட்டை ஊராட்சி மற்றும் அழகர் தேவன் கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா கலந்து கொண்டனர்.கடலாடி ஒன்றியம் இதம்பாடல் கிராமத்தில் கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினிகாந்த் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மண்டபம் ஒன்றியம் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார்,வாலந்தரவை ஊராட்சியில் சதா,குயவன்குடி ஊராட்சியில் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்புல்லாணி ஒன்றியம் முத்துப்பேட்டை ஊராட்சியில் திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின் , மாவட்ட நீதி திட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் ஜெனிஸ் , பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமுதி ஒன்றியம்பேரையூரில் பேரையூர் ஊராட்சி பொறுப்பாளர் மனோஜ் பிரபாகரன்,சூர்யபிரகாஷ்,யோககுமார் , பாபு கலந்து கொண்டனர்.புனவாசல் ஊரட்சியில்கமுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் யோகேசுவரன் மற்றும் லகிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதுகுளத்தூர் ஒன்றியம் செல்லூர் கிராமத்தில் மாவட்ட தாய்மண் திட்ட பொறுப்பாளர் பசுமை தினேஷ் மற்றும் கிராம இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.நயினார்கோவில் ஒன்றியம்வாகவயல் ஊராட்சியில் வாகவயல் ஊராட்சி பொறுப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!