Home செய்திகள் சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

by mohan

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் பிணை கோரவோ அல்லது வழக்கு நடத்தவோ தமிழ்நாட்டை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராக வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 95 சதவீத தீக்காயங்களுடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார். அந்த செய்தி இதயமுள்ள எந்த ஒரு மனிதரையும் பதைபதைக்க வைக்கும், துடிதுடிக்க வைக்கும்.சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் முன் மேற்படி இருவரையும் நிறுத்தி , விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, இருவரையும் தூக்குமேடைக்கு தமிழக அரசு அனுப்பவேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் ஆகும். ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தால் பெண்களை பாதுகாக்க தவறிய மாநிலம் தமிழகம் என்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது .மேலும் தற்பொழுது விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது, இந்த அரசு பெண்களை பாதுகாக்க தவறி விட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.பெண்கள் வீட்டின் கண்கள் . பெண்களை காக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை . அந்தக் கடமையிலிருந்து தமிழக அரசு தவறி விட்டது .மேற்படி இரு குற்றவாளிகளையும் பிணையில் விடாமல், அவர்கள் பிணை கோரினால் அதை கடுமையாக அரசுத்தரப்பில் எதிர்க்க வேண்டும். அவர்களை காவலில் வைத்து வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி உச்சகட்ட தண்டனையான தூக்கு தண்டனையை அவர்களுக்கு கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் .அதை விடுத்து விட்டு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை தப்பிக்க வைக்க கூடிய படுபாதக செயலை தமிழக அரசு செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி இரு குற்றவாளிகளுக்கும் ஆஜராக வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!