Home செய்திகள்மாநில செய்திகள் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார்;ஆர்.பி உதயகுமார் சவால்..

மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார்;ஆர்.பி உதயகுமார் சவால்..

by Askar

மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார்; ஆர்.பி உதயகுமார் சவால்..

மக்கள் ஜல்லிக்கட்டு நடத்தியது அ.தி.மு.கவா? தி.மு.க வா.என்று விவாதிக்க தயார் என்று ஆர்.பி.உதயக் குமார் சவால் விடுத்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார் பாக எம்.ஜி.ரின்107 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி மந்தை திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில பேரவை துணைச் செயலாளர் துரை.தனராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், கருப்பையா,தமிழரசன், எஸ்.எஸ் சரவணன், நீதிபதி, மகேந்திரன்,யூனியன் சேர்மன் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணன் பேரூர் செயலாளர் அசோக்குமார், மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் பழனி குமார்,நடிகர் சிங்க முத்து ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துனை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

மேல் முறையீடு செய்தவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக புரட்சித் தமிழர் எடப்பாடியாருக்கு ஆதரவான பொதுக்குழு தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. மூன்றாவது தலைமுறையாக கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து இந்த தாய் தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக சவால் விட்டு சத்தியம்மிட்டு சொல்கிறேன். உலகத்திலேயே இந்தியாவிலேயே ஏழைகளுக்காக உழைப்பவர்களுக்காக, சாமானியர்களுக்காக மாணவர்களுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர் வர்க்கத்திற்காக ஒரு இயக்கம் உண்டு என்று சொன்னால்அது அண்ணா திமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம் என்று சொல்வேன். அந்த இயக்கம் தான் இன்று ஆட்சி கட்டிலில் இருக்க வேண்டு ம்.புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை 32 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு‌க அரசு அரசு விழாவாக கொண்டாடு வதற்கு மீண்டும் 2016 ல் ஜெயலலிதாவை முதல்வராக்கிய மக்கள் இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள்.ஒரு சாதாரண தொண்டனை கிளைச் செயலாளரை விசுவாச முள்ள தொண்டனை முதலமைச்சராக்கிய இயக்கம் ஒன்று உண்டென்று சொன்னால் உலகத்திலேயே அது அண்ணா தி.மு.க மட்டும் தான் வேறு எதுவும் கிடையாது. சேலத்திலேயே இரண்டாவது இளைஞரணி மாநாடு நடத்துவதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு மணிமகுடம் சூட்டுவதற்காக ஒட்டு மொத்த அமைச்சரவையே அங்கு முகாமிட்டு இருக்கிறது.உதயநிதி ஸ்டாலின் மணிமகுடம் சூட்டுகிறார் என்றால் தி.மு.க.வில் எங்கே உள்ளது ஜனநாயகம். உதயநிதி ஸ்டாலின் என்ன தியாகம் செய்தார். இன்று அவர் அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்களாட்சி தத்துவத்தை பேசிக்கொண்டு மன்னர் ஆட்சிபடி தி.மு.கவில் வாரிசு அரசியல் புகுத்தபடுகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு எடப்பாடியார் மதுரையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருக்கு விசுவாச தொண்டர்கள் உண்டு. ஆனால் மதுரையில் மட்டும் தான் எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் அதிகம் அதனால்தான் மதுரையில் தொடங்குகிறோம் என்று அவர் கூறினார். ஆனால் தற்போது ஒரு நூற்றாண்டு விழா நடக்கிறது. கருணாநிதியை மக்கள் மறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கலைத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது மேடையில் நடிகர்கள் இருந்தார்கள் ஆனால் கீழே மக்கள் இல்லை ஏன் என்று சொன்னால் கருணாநிதியை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. அன்று புரட்சித் தலைவர் நூற்றா ண்டு விழாவில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக் குறையை போக்குவதற்காக ரூ1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் முல்லைப் பெரியாறு லோயர் கேம்பில் இருந்து அமைக்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்ற சரித்திரத்தை உருவாக்கியது. ஆனால் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் என்ன செய்துள்ளார்கள் எங்கெங்கு கல்வெட்டு வைக்க வேண்டுமோ அங்கெல்லாம் கல்வெட்டு வைத்துள்ளார்கள்.முன்பெல்லாம் கட்டிடம் கட்டிவிட்டு கல்வெட்டு வைப்பார்கள் ஆனால் தற்போது கல்வெட்டு வைத்துவிட்டு கட்டிடம் கட்டுகிறார்கள். கருணாநிதிக்கு நூலகத்தில் மைதானத்தில் விளையாட்டு அரங்கில் எல்லாம் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இனி மயானத்தில் தான் கருணாநிதி சுடுகாடு என்று பெயர் வைக்க வேண்டும் சர்வதிகாரப் போக்கில் செயல்படுகிறார்கள். தற்போது சேலத்தில் உரிமை மீட்பு இளைஞர் அணிமாநாடு நடக்கிறது. அந்த மாநாடு கூட ஸ்டாலின் இருந்த போது முதல் மாநாடு என்றும் அவரது மகன் உதயநிதி பொறுப்பேற்றவுடன் இரண்டாவது மாநாடு என்றும் இனி நாளை உதயநிதி மகன் இன்பநிதி வந்த பின் மூன்றாவது மாநாடு என்றும் நடத்தப்படுகிறது. தற்போது நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விதிமுறை வரைமுறை இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை முதன்முதலாக நடத்திக் காட்டிய பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் உள்ளது. ஒரே மேடையில் விவாதிப்போம் ஜல்லிக்கட்டு முறையாக விதிமுறையோடு சட்டப்படிஜனநாயக அடிப்படையில் மக்கள் ஜல்லிக்கட்டாக நடத்தியது அ.தி.மு.க.வா? தி.மு.க.வா?இன்று சவால் விட்டு கூறுகிறேன். காலம் மாறும் காட்சிகள் மாறும் அரசியல் அதிகாரம் நிரந்தரம் அல்ல. மக்கள் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இயற்கை வளங்களை எல்லாம் தி.மு.கவினர் கொள்ளை அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாடு மக்களை எளிதாக எடை போட்டு விடாதீர்கள் கொதித்து எழுந்தால் இந்த நாட்டில் நீங்கள் இருக்க முடியாத அளவிற்கு மகத்தான தீர்ப்பை வழங்கி விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் இளைஞர் இளம் பெண் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!