Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

(உஸ்மானிய பேரரசு -29)

(கி.பி 1299-1922)

முஸ்லீம்களுக்குள்ளே ஏற்பட்ட கொள்கை குழப்பங்களால் ஐரோப்பா மகிழ்ச்சி அடைந்தது.

குறிப்பாக ஈரான் சியா கொள்கையை பின்பற்றியதால் சுன்னி கொள்கையுடைய உஸ்மானிய பேரரசை எதிர்த்தது.

ஈரானிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவகையான ஆயுதங்களை கொடுத்து உஸ்மானிய பேரரசிற்கு எதிராக போர்களை தூண்டியது.

இதுபோன்ற இடைவிடாத பிரச்சினைகளால் உஸ்மானிய பேரரசு அமைதியிழந்து இருந்தது.

இந்த சூழலில் சுல்தான் சலீம் தனது 56 ஆவது வயதில் மரணமடைந்தார்.

அவரைத் தொடர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த சுலைமான் அல் கானூனி அவர்கள் பேரரசராக பதவி ஏற்றார்.

இவரின் ஆட்சியில் உஸ்மானிய அரசு பேரரசாக மட்டுமில்லாமல் வல்லரசாக மாறியது.

இவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், போர் கலையில் வல்லுநராகவும், இருந்தார்.

இவர் இஸ்லாமிய கல்வியையும், உலகம்சார்ந்த கல்வியையும், ஒருங்கிணைத்து சிறந்த கல்விமுறையை ஏற்படுத்தினார்.

இதன் பலனாக ஒழுக்கம்,இறைநேசம் மார்க்கபற்று, உலகின் அன்றைய அறிவுசார்ந்த விஷயங்கள் என கல்விகற்ற மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டனர்.

இதனால் கல்வி புரட்சி ஏற்பட்டது. கல்வியில் பல ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தனர்.

பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

அந்த நிலையில் ஐரோப்பா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

முஸ்லீம்களின் முகவரியாக துருக்கி இருந்ததால் ஐரோப்பியர்கள் முஸ்லீம்களை துருக்கியர்கள் என்று அழைத்தனர்.

உஸ்மானிய பேரரசின் கடற்படை மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டது. ஏராளமான போர்க்கப்பல்கள் இருந்தன.

முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்ததால், ஆட்சியிலிருந்த சுலைமான் அல் கானூனி அவர்கள் தூர நோக்கு சிந்தனையோடு அற்புதமான திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.

பெரிய கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம் என்று பாடங்கள் போதிக்கப்பட்டது.

படித்து வெளிவந்த அவர்களையே அரசின் நிர்வாகங்களில் அதிகாரிகளாக நியமனம் செய்தனர்.

இதனால் பேரரசர் நினைத்தபடி அரசாங்கத்தை எளிதாகவும், விசுவாசமாகவும், செயல்படுத்த முடிந்தது.

கிறிஸ்தவ இளவரசிகளை தகுதிக்கேற்ப திருமணங்கள் செய்து கொண்டனர். இதனால் மிகப்பெரிய இரண்டு சமூகங்கள் ஒன்றிணைந்ததால் ஆட்சியை சிறப்பாக நடத்த முடிந்தது

அரசு நிர்வாகங்கள் மிகச்சிறந்த முறையில் இயங்கியது. இதனால் பேரரசரின் திட்டங்களை எளிதாக செயல்படுத்தினர்.

வரிகள் மிகக்குறைவாக வசூலிக்கப்பட்டன. ஜகாத் போன்ற முஸ்லீம்களிடம் கட்டாயமாக வாங்கப்பட்ட பொருளாதாரமும்,

மற்ற சமூக மக்களிடம் மற்ற நாடுகளைவிட ஜகாத்தை விட குறைவாக வசூலிக்கப்பட்ட பொருளாதாரமும் இஸ்லாமிய பேரரசுகளை பொருளாதார வலிமை மிக்கதாக ஆக்கியது.

இது ஒரு புரட்சிகரமான ஒன்றிணைந்த பொருளாதார திட்டமாக இஸ்லாமிய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டது.

அப்பாஸிய ஆட்சியில் பாக்தாத் நகரை தீக்கிரையாக்கிய செங்கிஸ்கானின் வாரிசுகள் அற்புதமான அறிவுப் பொக்கிசங்களான புத்தகங்ளையும் தீயிட்டு கொளுத்தினர்.

பாக்தாதின் யூப்ரடீஸ் டைகிரிஸ்‌ நதிகளில் கொட்டப்பட்ட புத்தகங்களால் நதிகளே பல மாதங்கள் கருப்படைந்து ஓடியதாக வரலாறு கூறுகிறது.

இதனால் இஸ்லாமிய சட்ட நூல்கள் எல்லாம் இல்லாமல் ஆயின. புதிய புதிய பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய சட்டப்படி விளக்கங்கள் கொடுக்க மிக சிரமமான சூழல் உருவானது.

சுலைமான் அல் கானூனி அவர்களின் மறுமலர்ச்சி சிந்தனைகள் ஆச்சரியமான வைகளாக இருந்தன.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!