Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-2 (கி.பி 750-1258)

அன்று யூப்ரடீஸ் நதியின் அலைகள் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்தது.

நதியின் முகத்துவாரத்தை வந்தடைந்த அந்த இரண்டு அடுக்கு படகு ஒரு வளைவான மறைவான பகுதியில் மறைவாக நிறுத்தப்பட்டது.

படகை நிறுத்திவிட்டு அதில் வந்த ஆறு பேரும் தரையில் இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் நல்ல உயரமாக இருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது பெரிய படைத்தலைவர்களை போல இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் தலையை நன்றாக சுற்றி முகத்தின் ஒரு பகுதியை லேசாக மறைத்தவாறு அந்த சிறிய பாதையில் நுழைந்தார்கள்.

அந்தப்பாதையில் உள்ளே நுழைந்ததுமே ஒரு வயதான பெரியவர் இவர்களை ஒரு மாளிகையை நோக்கி அழைத்துச்சென்றார்.

அந்த பாதையின் இறுதியில் இருந்த அந்த மாளிகையை அடைந்ததும் ஏதோ ஒரு புதிய முறையில் சத்தம் வருமாறு கதவை தட்டினார்.

கதவு திறந்து ஒரு வயதான பெண்மணி முக்காடிட்டு ஒரு சிறு விளக்கோடு நின்றார். அவர் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தார்.

பெரியவர் கதவை சாத்தி உள்ளே நுழைந்ததும் அவர் தனது ஒப்பனைகளை களைய ஒரு அழகான இளைஞராக மாறினார்.

வந்த ஆறு நபர்களும் பெரும் வீரர்களாக காட்சி அளித்தனர். அந்த இளைஞர் உமைய்யா குலத்து இளவரசர் . அந்த பெண்கள் எல்லாம் உமைய்யா அரசகுல பெண்மணிகள்

பாக்தாத்‌நகரில் மாட்டிக்கொண்ட அவர்கள் தப்பித்து தங்கள் உமைய்யா குல ஆட்சி நடைபெறும் ஸ்பெயினுக்கு செல்ல சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஸ்பெயினுக்கு செய்தி போய் சேர்ந்து இவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு போக பெரிய கப்பலும், மேலும் சில கப்பல்களும் கடலில் வணிகக்கப்பல்கள் போல நடமாடி வருகின்றன.

பெரிய கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட அந்த சிறிய இரண்டு அடுக்கு படகு யூப்ரடீஸ் நதியில் இன்று இவர்களை மீட்க வந்திருக்கிறது.

உமைய்யா இளவரசர் வந்திருக்கிற வீரர்களிடம் பாக்தாத் சரியாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

அப்பாஸிய அரசரின் நிர்வாகம் மிகத்துல்லியமாக திட்டமிட்டு இயங்குகிறது. ஒவ்வொரு மாகாணங்களுக்கும் தனித்தனி கவர்னர்கள் இருக்கிறார்கள்.

பெரிய நகரங்களில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிறைய பள்ளிவாசல்களும், மதரசாக்களும் கட்டப்பட்டு இருக்கின்றன.

வரி வசூல் மேலும் ஷரியா சட்டங்களை அமல்படுத்த எல்லாம் ஆட்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மந்திரிகள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் அதிகாரம் இல்லை.அரசர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாரிகளுக்கு அலுவலகங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. மிகச்சிறந்த நிர்வாகமுறையாக இருக்கிறது.

அரசருக்கு தனி அதிகாரி உதவியாளராக இருக்கிறார்.அவர் பெரிய அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.

நான் இங்கு இருந்த இரண்டு ஆண்டுகளில் தொழில், விவசாயம் சிறப்பாக இருக்கிறது.

சாலைகள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. சிறப்பான மருத்துவமனைகள் நல்லமுறையில் செயல்படுகின்றன.

எல்லாவற்றையும் விட சிறப்பாக கல்வி மேம்பாட்டிற்கு “தாருல்ஹிக்மா” என்ற அறிவுப் பெட்டகமான கல்விச்சாலை அமைக்கப்பட்டுள்ளது

என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். தப்பிச்செல்ல இரவு நேரம் வருவதற்காக காத்திருந்தார்கள்.

அப்போது வேகமாக உள்ளே நுழைந்த வீரன் சொன்ன செய்தி, அங்கிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!