கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக ராழியா மதரஸாவில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்படும் அல் மதரஸத்துர் ராழியாவில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மதரஸா மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் நேற்று வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் கஷாயத்தை வாங்கி அருந்தி சென்றனர். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று நிலவேம்பு கஷாயங்களை அருந்துவதை நகரில் இருக்கும் அனைத்து மதரஸாக்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.