கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி 38ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரையில் உள்ள முன்னனி கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய கல்வி நிறுவனமும் ஒன்றாகும்.  இப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி ஆண்டு விழா நடத்துவது வழமை.  அதுபோல் இந்த வருடமும் நேற்று (13-04-2017) பள்ளி வளாகத்தில் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலப் பள்ளிகளுக்கான 38ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி  மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நபிசத்துல் ஹம்னா மற்றும் மரியம் ஃபாத்திமா ஆகியோரின் கிராத்துடன் தொடங்கியது.  பின்னர் துவக்கப்பள்ளி மாணவி ஆசியா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் தலைமையுரையை பள்ளியின் தாளாளர் MMK.இபுராஹிம் வழங்கினார்.  பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார. தமீம் ராசா சிறப்புரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பள்ளியின் துணைத் தாளாளர்.MMK.முஹம்மது ஜமால் இபுராஹிம் தலைமையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  பின்னர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் நிக்ழ்ச்சியின் இறுதியாக பள்ளி மாணவி குணா தர்சினி நன்றியுரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் மூத்த ஆசிரியப் பெருமக்கள், நிர்வாகிகிள் மற்றும் நூற்றுக் கணக்கான பெற்றோரகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.