கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

கீழக்கரையில் இன்று (11-05-2018) ஜும்ஆ தொழுகையுடன் புதிய தொழுகைப் பள்ளி ”மஸ்ஜிதுல் இஹ்லாஸ்” இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக  கிழக்குத் தெரு பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் ஜும்ஆ பேருரையுடன் தொழுகை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜா அனீஸ் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் ரஸ்தா செல்வம்,  மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.   மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாளர, பிர்தவ்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல அமைப்பு சகோதரர்கள் கலந்து கொண்டனர்.