திருவாடானை அருகே மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சீர்தாங்கி கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டுக் கொட்டகையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமநாதபுரம் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் இராமநாதபுரம் மது விலக்கு போலீசார் மற்றும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 660 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த திருவாடானை அருகே கருமொழி ராஜாங்கம் மகன் மணிவண்ணன் 30, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.