கீழக்கரை நகராட்சியில் வீட்டு வரிக்காக மறு அளவீடு தொடக்கம்..

கீழக்கரை நகராட்சி உள்ளடங்கிய பகுதிகளில் வீட்டு வரி வசூல் நகராட்சி நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கான முறையான பிரசுரங்களோ, அறிவிப்புகளோ இல்லாத காரணத்தால் வீட்டில் உள்ள பெண்கள் அதிகாரிகளை வீட்டினுள் அனுமதிக்க தயங்கிவந்தனர்.

இப்பிரச்சினையை 15வது வார்டைச் சார்ந்த சாதிக் என்பவர், கீழக்கரையில் மக்கள் பிரச்சினைக்காக சட்ட ரீதியாக போராடி வரும் சட்டப்போராளிகள் குழுமத்தில் இது சம்பந்தமாக பதிவிட்டார். அவருடைய கருத்துக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக சட்டப்போராளிகள் தளத்தின் முதன்மை நிர்வாகி சாலிஹ் ஹுஸைன், நகராட்சி ஆணையர் வசந்தியை சந்தித்து அதன் உண்மை தன்மையை உறுதி செய்ததுடன், ஆணையர் மக்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்ததையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது சம்பந்தமான தகவல்களுக்கு ஆணையரை 9790955056 என்ற அலைபேசியில் அழைக்கலாம்.