நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் இப்பகுதியில் இன்றுவரை மொத்தம் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக மருத்துவப் பிரிவு மற்றும் அதை சார்ந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் கோரோனா தொற்றால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அம்பாசமுத்திரம் அம்மையப்பர் சன்னதி தெருவில் கிளினிக் வைத்திருக்கும் இளம் பல் டாக்டர், அவர் உதவியாளர், தனியார் மருத்துவமனையின் பெண் டாக்டரின் தந்தை அவரது மகன் மற்றும் அங்குள்ள ஒரு மெடிக்கல் நடத்துபவர் என கொரோனா வேகமாக பரவுகிறது.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் கடந்த மாதம் 26ம் தேதி கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த 38 வயது பெண்ணுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 2 செவிலியர் மற்றும் 60 வயதுடைய சுகாதார பணியாளர் உட்பட 3 நபர் என மொத்தம் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பொருட்டு 7-ஆம் முதல் 9-ஆம் தேதி வரை 3 நாட்கள் தற்காலிகமாக மருத்துவமனை முழுமையாக மூடப்படுகிறது.
இக்கால கட்டத்தில் புறநோயாளிகள், உள்நோயளிகள் மற்றும் பிரசவ பகுதி, அவசர சிகிச்சை பகுதி ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.