Home செய்திகள் மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள நரசிங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்யன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் பயிலும் 130 மாணவர்களின் குடும்பங்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் சார்பாக ஒவ்வொருவருக்கும் ரூ 500 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், கைக்குட்டைகள், முகக்கவசமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் புஷ்பலதா தலைமை வகித்து நிவாரணப்பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் அல்லிமாமலர் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார வளமைய ஆசிரியர் திரு.வினித்குமார் ஆசிரியர்கள் மதிவாணன், ஸ்ரீதர்,ரவி,சித்ரா, அருணா, ஞானச்செல்வம், சூரியா ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளையும் மாணவர்களிடம் எடுத்துரைத்து நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர்களும் சமூக இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!