68
இராமநாதபுரம், நவ.23 – இராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரம் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய மழை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்தது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் கடலாடியில் 174 மிமீ, மழை அதிகளவாத பெய்துள்ளது. இதை தொடர்ந்து வாலிநோக்கம் 146 மிமீ, பரமக்குடி 88 மிமீ, ராமநாதபுரம் 85.60 மிமீ, தொண்டி 82.20 மிமீ, முதுகுளத்தூர் 80 மிமீ, கமுதி 74.80 மிமீ, தீர்த்ததாண்டதானம் 72.10 மிமீ, வட்டாணம் 70.80 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 66 மிமீ, ராமேஸ்வரம் 54 மிமீ, திருவாடானை 42 மிமீ, தங்கச்சிமடம் 36 மிமீ, பாம்பன் 20.60 மிமீ, மண்டபம் 20.20 மிமீ, பள்ளமோர்குளம் 8.70 மிமீ என மாவட்டம் முழுவதும் 1,121 மிமீ மழை பெய்துள்ளது. சராசரி அளவாக 70.11 மிமீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
You must be logged in to post a comment.