Home செய்திகள் இன்று உலக மகிழ்ச்சி தினம்.(மார்ச் 20).

இன்று உலக மகிழ்ச்சி தினம்.(மார்ச் 20).

by mohan

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.வசந்தம் என்றாலே பொதுவாக எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம் தானே. ஆனால் புன்னகையையோ மகிழ்ச்சியையோ நாம் எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் அதற்கான வழிகளை நாம் அறிவதில்லை. இதோ உங்கள் புன்னைகையையும், மகிழ்ச்சியையும் அதிகப் படுத்த விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட வழிகள் உங்களுக்காக.

வெளியிடங்களுக்குச் செல்லுங்கள், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை விட வெளியே செல்வதால் சுற்றுச் சூழலில் இயல்பாகவே உள்ள இதமான காற்று, விட்டமின் D-ஐ தரும் சூரிய வெளிச்சம் மற்றும் பறவைகளின் ரீங்காரம், எதிர்பாராத எப்போதும் சந்தோசமாக இருக்கும் நபர்களின் சந்திப்பு என்பன போன்ற பல நிகழ்ச்சிகள் நமது மனதைக் கவர்ந்து மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

உடற்பயிற்சி, தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதே அந்த நாள் முழுதும் சக்தியும், உற்சாகமும் மிக்க நபராகச் செயற்படவும் நேர்மறையாக சிந்திக்கவும் உதவும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும் உடலுக்கு நாம் கொடுக்கும் பயிற்சி உடலில் நோய்க் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் புரதங்களான ஆண்டிபொடீஸ் ஐயும், மனநிலையைத் (Mood)தீர்மானிக்கும் மூளையில் இருந்து வெளியாகும் எண்டோர்ஃபின்ஸ் என்ற ஹார்மோனையும் அதிகம் உற்பத்தி செய்யும் என ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ற உறக்கம், உடலில் ஸ்டெரஸ் ( அழுத்தம்) எனப்படும் அசதியை அதிகம் ஏற்படுத்துவது தூக்கம் இன்மையே.. நம்மில் பலர் அதிகமாக வேலை செய்து குறைவான நேரமே தூங்குவதால் அவர்களுக்கு அதிகபட்ச அழுத்தமும், எதிர்மறை சிந்தனையும் ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.மனதுக்கு பிடித்த பாடல்களை வெட்கத்தை விட்டு முனகுங்கள், நம்மில் பலருக்கு பாடல்களை ரசிக்க பிடிக்கும். ஆனால் பாட மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்றால் எப்போதெல்லாம் சிறிது ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் ரேடியோ மற்றும் ஆடியோ பாடல்களின் சத்தத்தை சற்று அதிகரித்து அந்த இசையுடன் சேர்ந்து பாடுங்கள் என்கிறார்கள். உதாரணமாக வீட்டில் குளிக்கும் போதோ, டிராபிக் ஜேமில் மாட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு ஓய்வு நேரங்களிலோ இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளானர்.

மோசமான அனுபவங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள், உங்கள் வாழ்வில் மோசமான கட்டங்களும் அனுபவங்களும் அவ்வப்போது வருவது வழக்கம். அப்போதெல்லாம் அதைக் குறித்து வைத்து விட்டு மனதில் இருந்து அதை விலக்கி வைக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றார்கள். அல்லது குறித்த அனுபவத்தின் பின் வீடு சென்று பிடித்தமான புத்தகம் வாசித்தல் அல்லது பிடித்தமான செயல் ஏதிலும் ஈடுபடுதல் மூலம் மனதை திசை திருப்புமாறும் இது உடனடி மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.வாழ்வின் போக்கிலே வருடும் மகிழ்ச்சியை விடாமல் பிடித்தால் உன்னதம் மலரும்.மகிழ்ச்சி மகிழ்ச்சி என நாம் கொண்டாடும் தருணங்கள் மலர்ச்சியை வழங்கும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!