கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் பல்வேறு பணிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் IDBI மதுரை மண்டல வங்கியின் மூத்த காப்பீட்டு முகமை தலைவர் R. புனிதா இராஜகோபால் உதவித் தலைவர்கள் B. பிரகதி மற்றும் N. சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மூன்றாமாண்டு மாணவ மாணவியர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் Dr. P. பாலகிருஷ்ணன், முதுகலை ஆங்கிலத் துறைத்தலைவர் R.D.நெல்சன் டேனியல் மற்றும் வேதியியல் துறைத்தலைவர் A.அப்துல்சர்தார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும் கணிதத்துறைப் பேராசிரியருமான K.விக்னேஷ்குமார் அவர்கள் செய்திருந்தார்.