Home செய்திகள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு..

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) 12ந் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது..

இந்த முகாமில் நிலக்கோட்டை, கொடைரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, சிலுக்குவார்பட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை (நேற்று) சுமார் 1342 மனுக்கள் பெறப்பட்டது.                                                   இந்த மனுக்களில் பட்டா மாறுதல் மற்றும் முதியோர் உதவித்தொகை உட்பட 112 மனுக்களுக்கு உடனடியாக தகுதியான நபர்களுக்கு உடனடித் தீர்வாக முடிவு செய்து பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை சான்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அருகே உள்ள குல்ல லக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் வயது 55 தனது மகளுடன் வந்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உங்களுக்குரிய கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்கள் ஆக கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரன் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கொடுத்த மனுவில் எனக்குரிய சொத்தை எனது உறவினர்கள் பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.   இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர் வேலு அதிகாரிகளை அழைத்து பொதுமக்களிடம் இருந்து  மனுக்களை முந்தைய தன்மையை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒவ்வொரு மனுவையும் நிலுவையில் வைக்காமல் அதற்குத் தேவையான மூல ஆவணங்களை கொண்டு வரச் சொல்லியும், உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிய  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிலப்பட்டா மற்றும் ரேஷன் கார்டுகள் வேண்டி மனு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டா மற்றும் குடும்பக் அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வேலு வழங்கினார்.

அப்போது உடன் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், மண்டலத் துணை தாசில்தார்கள் ருக்மணி, மணிமேகலை, ராமசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவண வாசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!