
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2017) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் பின்பு பயனாளி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
கடலாடி வட்டம், மாராந்தை கிராமத்தைச் சேர்ந்த திருமதி.கருப்பாயி என்பவர் தனது பேரக்குழந்தையின் கல்விக்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பத்திருந்தார். அதன்படி இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்னாரது பேரக்குழந்தையின் கல்வி உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.