Home செய்திகள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக மூன்று நாட்கள் ஜமாபந்தி..

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக மூன்று நாட்கள் ஜமாபந்தி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 12/06/19 முதல் 14/06/19 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 1428-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நல அலுவலரும் மாவட்ட துணை ஆட்சியருமாகிய முத்துகழுவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனுக்கள் அளித்த பயனாளர்களுக்கு தேவையின் அடிப்படையிலும் முதியோர் உதவித் தொகை, ஜாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவைகளை தகுதியின் அடிப்படையிலும் உடனடியாக கிடைப்பதற்கு ஆவண செய்யப்பட்டது. மேலும், பட்டா மாறுதல் சம்மந்தமாக மனுஅளித்த பயனாளர்களுக்கு நில அளவையர் மூலமாக சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைவில் ஓரிரு நாட்களுக்குள் பட்டா கிடைப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. முழு புலம் மற்றும் நத்தம் பட்டா மாறுதல் இனங்களுக்கு  மனு அளித்த பயணாளிகளுக்கு உடனுக்குடன் பட்டா வழங்கப்பட்டது.

மற்றும் ஜமா பந்தியின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் அனைவருக்கும், முத்து கழுவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் இனி வரும் காலங்களில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் எது போன்ற லட்சியங்களை மனதில் நிறுத்தி ஜெயிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினார். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கவுரவிக்கும் வகையிலும் செயல்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் மாவட்ட துணை ஆட்சியருமான முத்துகழுவன் அவர்களை பொதுமக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டினர்.

சிறப்பாக நடைப்பெற்று பல்வேறு பொதுமக்கள் பயனடைந்த இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் ஆத்தூர் வட்டாட்சியர் பிரபா தனி வட்டாட்சியர் பஷீர் அஹமது மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் குமார் வருவாய் ஆய்வாளர்கள் பிரவீனா வெங்கடேஷ் காளிரத்தினம் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!