மத்திய அரசு அறிவித்த ரூ.6 ஆயிரம் வாங்க விவசாயிகள் ஆர்வம்.. வருவாய் துறை அதிகாரிகள் தகவல்..

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பயடைய ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆவணங்களை சமர்பித்து வருகின்றனர். மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை 01.02.2019 இல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

அதில் பிரதமர் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் 2 எக்டேருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மத்திய அரசு இத்திட்டதை விரைந்து செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது இதையடுத்து, ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி கிராமத்தில் ரூ.6 ஆயிரம் பெற தகுதியான விவசாயிகள் நிலப் பத்திர, பட்டா சிட்டா , வில்லங்க சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தனர். மார்ச் 31 ம் தேதிக்குள் முதல் தவணைத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் அதற்கான பணிகளில் வருவாய் துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

#Paid Promotion