Home செய்திகள்உலக செய்திகள் கோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).

கோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).

by mohan

ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் (Gerald Gerry Neugebauer) செப்டம்பர் 3, 1932ல் ஜெர்மனி குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆஸ்த்திரிய அமெரிக்க கணிதவியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆகிய ஆட்டோ ந்யுகெபவுவேர் ஆவார். தாயார் கிரேட்டே பிரக் ஆவார். தன் ஏழாம் அகவையில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தன் இளவல் பட்டம் 1954ல் பெற்றார். 1960ல் இயற்பியலில் தன் முனைவர் பட்ட்த்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு இருநீரகத்தின் நேர்மின்னணுகளின் நேர், எதிர் ஒளிநகல்கள் எடுத்தலாகும். இவர் அமெரிக்கப் படையில் பணிபுரிந்தபோது தாரைச் செலுத்த ஆய்வகத்தில் தங்கினார். அங்கே 1952 வரை அமெரிக்கப் படைதுறைக்காக பணிபுரிந்தார். 1952ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் புல உறுப்பினராக, அதாவது உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து 1970ல் முழுநிலைப் பேராசிரியரானார்.

1985ல் ஓவார்டு அகுசு பேராசிரியாக அமர்த்தப்பட்டார். 1988ல் இயற்பியல், கணிதவியல், வானியல் பிரிவின் தலைவரும் ஆனார். இவர் அண்மையில் இராபர்ட் ஆந்திரூசு மில்லிகன் தகைமை இயற்பியல் பேராசிரியர் ஆனார். இவர் 1980 முதல் 1994 வரை பலோமார் வான்காணக இயக்குநராக விளங்கினார். ஜெரால்டு அகச்சிவப்புக்கதிர் வானியலின் முன்னோடியாக உலகமெலாம் அறியப்பட்டுள்ளார். இவர் கோள்களின் அகச்சிவப்புக்கதிர் ஆய்வில் பெரும்பங்கு வகித்துள்ளார். இதோடு இவர் அகச்சிவப்புக்கதிர் வானியல் செயற்கைக்கோளையும் (IRAS) அகச்சிவப்புக்கதிர் செயல்முறை, பகுப்பாய்வு மையத்தையும் (IAPC) பயன்படுத்தி புவியிலும் விண்வெளியிலும் விண்மீன்களையும் பால்வழியையும் பிற பால்வெளிகளையும் அகச்சிவப்புக்கதிர் ஆய்வுகள் வழியாக மவுண்ட் வில்சன் பலோமார் பணியாளருடன் இணைந்து நோக்கீடுகள் செய்து, வான்வெளியில் நிலவும் பல்லாயிரக் கணக்கான அகச்சிவப்புக்கதிர் வாயிகளைக் கண்டுபிடித்தார். மேலும் முதன்முதலாக பால்வெளி மையத்தின் அகச்சிவப்புக்கதிர் காட்சியையும் வெளிப்படுத்தினார்.

ஜெரால்டு, இராபர்ட் பி.இலைட்டனுடன் இணைந்து இருமைக்ரான் வானளக்கையை முடித்தார். இதுதான் முதல் வானின் அகச்சிவப்புக்கதிர் அலக்கையாகும். இந்த அலக்கை வழியாக 5000க்கும் மேற்பட்ட அகச்சிவப்புக்கதிர் வாயிகளின் அட்டவணை உருவாக்கப்பட்டது. இவர் எரிக் பெக்லினுடன் இணைந்து பெக்லிந்நியூகெபௌவேர் வான்பொருளைக் கண்டுபிடித்தார். இது ஓரியான் ஒண்முகிலில் உள்ள உயர்செறிவான அகச்சிவப்புக்கதிரை உமிழும் வான்பொருள் ஆகும். இது 10 மைக்ரான் அலைநீளத்தினும் குறைந்த கதிர்வீச்சுப் பொருள்களிலேயே மிகப்பொலிவான பெரும்பொருளாகும். இவர் அவாயில் உள்ள கெக் வான்காணக வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் பெரும்பாத்திர்ம் வகித்தார். இவர் இரண்டு நாசா அறிவியல் சாதனைப் பதக்கங்களை 1972 இலும் 1984 இலும் பெற்றார். இவர் 1985 இல் அமெரிக்க வான், விண்வெளி ஊர்தியியல் நிறுவனத்தின் விண்வெளி அறிவியல் விருதைப் பெற்றார். இரிச்மியர் விரிவுரை விருதையும் 1985ல் பெற்றுள்ளார். 1986ல் இரம்போர்டு பரிசையும் 1996ல்என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமையையும், 1998ல் எர்ழ்செல் பதக்கத்தையும் 2010ல் புரூசு பதக்கத்தையும் பெற்றார்.

கலிபோர்னியா அறிவியல், தொழிலக அருங்காட்சியகம் இவரை 1986 ஆம் ஆண்டின் கலிபோர்னியா அறிவியலாளராக அறிவித்தது. இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அமெரிக்க மெய்யியல் கழகத்துக்கும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அரசு வானியல் கழகத்துக்கும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நியூகெபவுவேர் புவி இயற்பியலாளரான மார்சியா நியூகெபவுவேரை மணந்துகொண்டார். மார்சியா தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிந்த சூரியக் காற்று ஆய்வ்யின் முன்னோடியாவார். இவர்கள் அரிசோனாவில் உள்ல தக்சனில் வாழ்ந்தனர். அகச்சிவப்புக் கதிர் வானியலின் முன்னோடி ஆய்வால் பெயர் பெற்ற ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் செப்டம்பர் 26, 2014ல் தனது 82வது அகவையில் தக்சனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com