Home செய்திகள்தேசிய செய்திகள் காந்தி சிலையும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

காந்தி சிலையும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

by Mohamed

கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், ஆனால் நிறம் மாறினாலும் மனம் மாறாது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்.

முப்பது கோடி முகமைடையாள் என்ற பாடலுக்கு சொந்தமான இந்திய திருநாட்டில், பன்முக தன்மை சமுதாயத்தை கொண்ட நம் நாட்டில், சகோதரத்துவத்துடன் வாழும் மக்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கையை புகுத்துவதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு இது ஒரு தூண்டுகோளாக அமையுமோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இது போன்ற அசாதாரண சூழலுக்கு தீணி போடும் வகையில் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் சிலைகளும் அவ்வப்போது உடைக்கப்பட்டுவதும், பின்னர் சிலையை பாதுகாக்க இரும்பு கூண்டில் வைப்பதும் வக்கிரத்தின் உச்சத்தை காட்டுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் பாதாவுன் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சமூக விரோதிகளால் உடைப்பப்பட்டது. உடனே அதே இடத்தில் காவி வண்ணம் பூசிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலையின் புகைப்படங்கள் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தீயாக பரவியது. ஆனால் பதட்டத்தை தடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சார்ந்த ஒருவர் காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு காவல் துறை முன்னிலையில் நீல நிறம் மாற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த சர்ச்சைக்கு பிறகு சர்ச்சைக்கு தற்போது சஹஜான்பூர் மாவட்டத்திலுள்ள பந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் போன வருடம் வரை அந்த காந்தி சிலையில் உடை வெள்ளை நிறத்திலும் கண்ணாடி கருப்பு நிறத்திலும் இருக்க தற்போது இரவோடு இரவாக காந்தி சிலையின் உடலில் உடுத்தியிருக்கும் உடைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தரப்பு இது கண்டிப்பாக பாஜகவின் வேலையாகத்தான் இருக்கும் என அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!