Home செய்திகள் ராமநாதபுரத்தில் இதய நோய் பாதித்த270 குழந்தைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை

ராமநாதபுரத்தில் இதய நோய் பாதித்த270 குழந்தைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை

by mohan

இராமநாதபுரத்தில் அமிர்தா மருத்துவமனை சார்பில் இன்று நடந்த குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சிறப்பு முகாமில் 270க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். ராமநாதபுரம் ராஜசூரிய மடை அமிர்தா வித்யாலயத்தில் கொச்சி அமிர்தா மருத்துவமனை, ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் எச்டிஎப்சி எர்கோ சார்பில் இதய நோய் பாதித்த குழந்தைகளுக்கான இலவச பரிசோதனை சிறப்பு முகாம் இன்று நடந்தது. தமிழ்நாடு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பிரம்மச்சாரி நிகிலேசம்ரிதா சைதன்யா தொடங்கி வைத்தார்.ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதய குறைபாடுகளுடன் பிறந்த 270 குழந்தைகளுக்குகொச்சி அமிர்தா மருத்துவமனை குழந்தை இருதயவியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் சோதனை செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 130 குழந்தைகளுக்கு கொச்சி அமிர்தா மருத்துவமனையில் இலவச சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அமிர்தா மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை அல்லது வடிகுழாய் நடைமுறைகள் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை உட்பட இலவச சிகிச்சையை வழங்க உறுதி அளிக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:ஜெனிசிஸ் அறக்கட்டளை, அமிர்தா ஹார்ட் கேர் அறக்கட்டளையின் தாராளமான ஆதரவின் மூலம் இந்த மனிதநேய முயற்சி சாத்தியமாகிறது. துணை முதல்வர் பாலவேல் முருகன் நன்றி கூறினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com