Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பழனி அருகே மானூரில் அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன் விற்ற திண்பண்டங்களை சாப்பிட்டதால் 49 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..

பழனி அருகே மானூரில் அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன் விற்ற திண்பண்டங்களை சாப்பிட்டதால் 49 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..

by ஆசிரியர்

பழனி அருகே மானூரில் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்க ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் 49 க்கும் மேற்ப்பட்டோர் வாந்தி மயக்கம். பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

பழனியருகே மானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகள் 49 க்கும் மேற்ப்பட்டோர் தீடிரென்று வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டதால் பள்ளியில் பதட்டம் உடனடியாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஜந்து 108 ஆம்புலன்ஸ்கள் மானூருக்கு சென்றதால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு ஆம்புலன்சில் குழந்தைகளை இறக்கி போர்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பள்ளியின் முன் விற்பனை செய்த பலகாரங்களின் சட்டினியில் பல்லி விழுந்ததே காரணம் என்று பள்ளி குழந்தைகள் கூறுகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!