மீன்பிடி தடைகாலம் வருமானத்திற்கு தடை.. அத்தடை குழந்தைகளின் படிப்பிற்கும் தடையாக தொடரும் வேதனை…

இந்த வருடம் கிழக்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 15 முதல் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, மேற்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் ஆனதை அடுத்து வரும் ஜீன் 15 தேதிக்கு பின் தான் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லமுடியும், இதனால் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்த பல லட்சம் மீனவர்களும், மீனவ சார்ப்பு தொழிலாளர்கள் வருமானம் இன்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையில் பள்ளிகளும் விடுமுறை கழிந்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீனவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க போதிய வருமானம் இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதேவேளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் பல பள்ளி சேர்க்கைக்கு பணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்களை அனுமதிப்போம் என சொல்வதால் பல மீனவ குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். ஒவ்வொரு மீனவனும் தனது குழந்தைகளும் படித்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் தனது உயிரை பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர், ஆனால் அரசு அறிவித்த தடைகாலம் என்பதால் தான் மீனவர்கள் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியவில்லை.

மீன் பிடித்தல் மட்டுமே தொழிலாக செய்யும் இவர்களுக்கு பள்ளி நிர்வாகங்களும், அரசு அதிகாரிகளும் மீனவப் பிரச்சினையில் கவனம் செலுத்தி அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும். அதே சமயம் அரசு இதில் தலையிட்டு மீனவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கை கட்டணத்தை ஜூன் 16 தேதிக்கு மேல் கட்டணத்தை செலுத்த அனுமதிக்கும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க ஆவன செய்யவேண்டும் என்ற மீனவ சமுதாய கோரிக்கை வலுத்துள்ளது. அரசாங்கம் செவி சாய்க்குமா??

1 Comment

  1. அரசு கண்டிப்பாக ஆணை பிறப்பிக்க வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

Comments are closed.