Home செய்திகள் மதுரை மாவட்டம் கள்ளழகர் மலைப்பகுதியில் திருக்கோவில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.!

மதுரை மாவட்டம் கள்ளழகர் மலைப்பகுதியில் திருக்கோவில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.!

by Askar

மதுரை மாவட்டம் கள்ளழகர் மலைப்பகுதியில் திருக்கோவில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புபணிகள் துறை இயக்குநர் டாக்டர் C . சைலேந்திரபாபு IPS , அவர்களது உத்தரவின்படி வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ அனைப்பது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 20 கமாண்டோ வீரர்களுக்கு அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் வனப்பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . மேலும் இவர்கள் வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் . மேலும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் பணியாளர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது . மேலும் தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புபணிகள் துறை கமாண்டோ வீரர்கள் , வனத்துறையினர் , கல்லூரி மாணவர்கள் , NCC மற்றும் NSS மாணவர்கள் அடங்கிய 100 கொண்ட குழு உருவாக்கப்பட்டு இவர்களுக்கு 01 . 02 . 2020 முதல் 10 . 02 . 2020 வரை காட்டுத்தீயனை ஆரம்ப கட்டத்திலேயே எவ்வாறு தடுப்பது என்பது குறித்தான பயிற்சி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!