கீழக்கரை சதக் கல்லூரியில் தீ விபத்து தடுப்பது குறித்த செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது..

கீழக்கரையில் இன்று (19-07-2017) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழ்க்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.00 மணி அளவில் தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த செயல்முறைப் விளக்க பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில் ராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் விபத்து காலங்களில் செயல்படும் துறைகள் மற்றும் தீயணைக்கும் வழிமுறைகள் பற்றி செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்யிசியில் ஆர்வம் கொண்ட பலர் கலந்து கொண்டனர்.
http://keelainews.com/2017/07/19/fire-prevention-training/