Home செய்திகள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குப்பைத்தொட்டி தீ..

சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குப்பைத்தொட்டி தீ..

by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி, ஐடிஐ, பொன்னகரம் உள்ளிட்ட பல இடங்களில் இரும்பால் செய்யப்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தொட்டிகளில்  இரவு நேரங்களில் இவற்றில் மர்மநபர்கள் தீ வைத்துவிட்டுச்செல்வது  வழக்கமான செயல்பாடாகவே மாறிவிட்டது. விசாரித்தால் கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் தனியார்  நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ள நிலையில் மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவால்  வேண்டுமென்றே தீவைத்து எரித்து விட்டு வேலையை சுலபமாக(ஒன்றுமே செய்யாமல்) சென்று விடுகின்றனர்.
இதே போன்ற செயல் தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அஅறியமுடிகிறது. இவ்வாறு எரிக்கக்கூடாத பொருட்களை எரிப்பதால் காற்று மாசு அடைவதோடு வெடிக்கும் பொருட்களால் வழியில் செல்வோரக்குஅபாயம் ஏற்பட்டவாய்புள்ளது.  மேலும் சாலைகளில் புகை மறைத்து எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  இந்த விசயத்தில்  நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள்., சுகாதார ஆய்வாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மெத்தனமாக இருக்காமல் ஆராய்ந்து உடனே முடிவெடுப்பது நல்லது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!