Home செய்திகள் தீபாவளியன்று மதுரையில் ஏற்பட்ட தீ விபத்துக்கள்..

தீபாவளியன்று மதுரையில் ஏற்பட்ட தீ விபத்துக்கள்..

by ஆசிரியர்

மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில்  தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால் திடீரென அவற்றில் தீபிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு  தீயை போராடி அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித இடர்பாடுகளும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக குடியிருப்பு இருக்கும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல் மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் ஏற்பட்டுள்ள தீ விபத்தை துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!