கீழக்கரையில் பழைய இரும்பு கடை கிடோனில் தீ விபத்து …….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மணிகண்டன் என்பவர் பழைய இரும்பு கடை நடத்திவருகிறார். அவர் கடைக்குப் பின்புறம் கிடோன்  உள்ளது அதில் பல ஆயிரம் மதிப்பிலான அட்டைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

இதை கண்ட அப்பகுதி மக்கள்  உடனடியாக ஏர்வாடி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்புத் துறை காவலர்கள் ஜெயராமன், சிவக்குமார், கணேசன், ஜீவா, தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.