Home செய்திகள் நிலக்கோட்டை தாலுகாவில் விலை சரிவினால் சந்தையில் குவிந்து கிடக்கும் வாழைத்தார்கள் .. விவசாயிகள் வேதனை

நிலக்கோட்டை தாலுகாவில் விலை சரிவினால் சந்தையில் குவிந்து கிடக்கும் வாழைத்தார்கள் .. விவசாயிகள் வேதனை

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகாவில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, ஆத்தூர், வத்தலகுண்டு மற்றும் வைகை ஆற்றுப்பாசனப் பகுதிகளான விளாம்பட்டி, அணைப்பட்டி போன்ற பகுதிகளில் ஒட்டுநாடு, ரஸ்த்தாலி, பூவன், முப்பட்டை, செவ்வாழை,மோரிஸ் போன்ற ரகங்கள் பலநூறு ஏக்கர் பரப்பளவிற்கு மேல் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் இந்தாண்டு கஜாபுயலினால் ஒரளவு மழை பெய்துள்ளதால் வாழை விளைச்சல் சற்று அதிகம் இருப்பினும், பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் வத்தலக்குண்டுவில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் இயங்கிவரும் தனியார் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு பின் பெங்களூர், ஆந்திரா, கோவா உட்பட வெளி மாநிலங்களுக்கும் சென்னை, கோவை, ஈரோடு போன்ற வெளியூர்களுக்கும் அனுப்பட்டு வருகின்றது

இந்நிலையில் இந்த மாதம் சித்திரை மாதம் என்பதாலும் கல்யாணம் போன்ற முகூர்த்த மற்றும் விஷேச நாட்கள் இல்லாததாலும் கடந்த மாதம் 400 – 500 விலைக்கு விற்பனையான வழைத்தார்கள் தற்போது 50 – முதல் 150வரை மட்டும் விலை போவதால் விவசாயிகள் சரியான விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு விற்பனை செய்து பெரும் வேதனை அடைந்துள்ளனர்

மேலும் வாழைத்தார்களை தேக்கி வைத்து விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசு வாழைத்தார்களை பதப்படுத்தும் குடோன் மற்றும் நிரந்தர ஆதய விலை நிர்ணய குழு அமைத்து தர வேண்டும் எனவும், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு மாநிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றார்

நிலக்கோட்டைச் செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!