மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, சிக்கந்தர் சாவடி பகுதிகளில் பிரபல செய்யது பீடி, நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபில், பீடி தயாரித்து குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்யது பீடி நிறுவன மேலாளர் முகம்மது அப்துல்லா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீபீடி பண்டல்களை விற்பனை செய்யவந்த நபரை செய்யது பீடி நிறுவன ஊழியர்கள் மடக்கிபிடித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் போலீபீடி பண்டல்களை விற்பனை செய்தது மதுரை ஆனையூரை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து பண்டல் பண்டலாக பீடிகள், DS பட்டணம் பொடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.