Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடியில் அனல் பறக்கும் பிரச்சாரம்… திமுக-பாஜக மாறி மாறி குற்றச்சாட்டு..

தூத்துக்குடியில் அனல் பறக்கும் பிரச்சாரம்… திமுக-பாஜக மாறி மாறி குற்றச்சாட்டு..

by ஆசிரியர்
கருணாநிதி பேச்சில் நாகரிகம் உண்டு ஆனால் ஸ்டாலின் பேச்சில் நாகரிகம் இல்லை – தமிழிசை !!

எதுகை, மோனை என நினைத்து ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். கருணாநிதியின் பேச்சில் நாகரிகம் இருக்கும். ஆனால், ஸ்டாலின் பேச்சு நாளுக்கு நாள் மக்களிடையே அவருக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது. என தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தாமரை மலராது – கருகி விடும் – கனிமொழி பேச்சு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் நாட்டை மதம், சாதி பெயரால் பிரித்து இந்த நாட்டில் அதிகாரத்தினை பயன்படுத்த நினைக்கும் மோடி அரசு, அவர்களுக்கு பினாமியாக செயல்படும் அதிமுக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல்,ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.இதற்கு காரணமான மத்தியில் இருக்கும் மோடி ஆட்சி மற்றும் அவர் தாங்கி இருக்கும் அதிமுக ஆட்சி இருவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி நமக்கு நல்லது கிடைக்கும்,காலையில் எழுந்தால் உதயசூரியன் தான், ஆனால் தாமரை மலராது அதிலும் இந்த கடும் வெயிலில் தாமரை கருகி விடும் என்றார்.

தமிழிசையை பாஜக நிறுத்தியது பாஜகவின் சதி- திமுக தலைவர் ஸ்டாலின்..

தூத்துக்குடியில் தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது பாஜகவின் சதி. மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்றார் தமிழகத்தில் அடிமைஆட்சி நடக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நம்பிக்கை இல்லாத கூட்டணி. மோடி ஆட்சியில் 40ராணுவவீரர்கள் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். ஆனால் மோடி கையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

கடந்த வருடம் மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற அப்பாவி மக்கள் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 13 பேர் இறந்துபோனது தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை ட்விட்டரிலாவது இரங்கல் தெரிவித்தாரா?. வடமாநிலத்தில் ஒரு பிரச்னை என்றால் மோடி அமைதியாக இருந்துவிடுவாரா? இளம்பெண் ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேரை சுட்டுக்கொன்றவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும். 

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுதான் இந்தியா சந்திக்ககூடிய கடைசி தேர்தலாக இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது – கனிமொழி

பலருக்கும் ஒரு அச்சம்  இருக்கிறது. மறுபடியும் பிஜேபி ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுதான் இந்தியா சந்திக்ககூடிய கடைசி தேர்தலாக இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது. நிஜமாக சொல்கிறேன் அது வெறும் அடிப்படை ஆதாரமற்ற அச்சமில்லை. அவர்கள் இதை செய்ய கூடியவர்கள் தான். இனிமேல் தேர்தலே நடத்தகூடாது என்று நினைக்க கூடியவர்கள் தான். நாம் எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். மத கலவரங்களை, சாதி கலவரங்களை உருவாக்கி பாஜக போட்டியிடக்கூடிய அத்துணை தொகுதிகளிலும் எப்படியாவது சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வெளிப்படையாக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிற ஒரு கட்சி உண்டு என்றால் பாஜக கட்சி தான். இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் எந்த மதத்தை சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமான இந்தியா என்ற உணர்வு தொடர வேண்டும் என்றால் அந்த நம்பிக்கை தொடர வேண்டும் என்றால் எந்த சூழலிலும் இந்த நாட்டில் மறுபடியும் பிஜேபி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலையை புரிந்து கொண்டு இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும்.

தன் குடும்பத்திற்கும் தனக்கும் என்ன லாபம் இருக்கிறது அதை மட்டும் செய்கிற பன்னீர்செல்வம் வியாபாரியா அல்லது நான் வியாபாரியா?. – முன்னாள் எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன்

மன நிம்மதி இல்லாமல் உள்ளேன். அதனால்தான் தர்ம யுத்தம் செய்ய அங்கு சென்று அமர்ந்தேன் என்றார். மேலும் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறினார். ஆட்சியில் நிறைய தவறு நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த பயப்படுகின்றனர். மிகப் பெரிய கஷ்டம் நடக்கிறது பன்னீர்செல்வம் பகிரங்கமாக பேட்டி அளித்தார்.

இந்த ஊழல் ஆட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என அறிவித்தார். அவருக்கு ஆதரவாக நாங்களெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உண்ணாவிரதம் இருந்தோம். விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரை 13ஆயிரத்து 500 பேரை எனது சொந்த பணம் மற்றும் கட்சிக்காரர்களை பணத்தை செலவழித்து தூத்துக்குடிக்கு அழைத்து சென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். பன்னீர்செல்வத்தை காமராஜர், பேரறிஞர் அண்ணாவை போன்று உத்தமனாக பார்த்தோம். இதுக்கு என்ன அரசியல் வியாபாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. எங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்து விட்டு, துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பெற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கும் தனக்கும் என்ன லாபம் இருக்கிறது அதை மட்டும் செய்கிற பன்னீர்செல்வம் வியாபாரியா அல்லது நான் வியாபாரியா?.

ஏற்கனவே நான் கூறியது போல், 2312 கோடி ரூபாய் வைத்துள்ள பன்னீர்செல்வம் அரசியல் வியாபாரியா?. அல்லது நான் அரசியல் வியாபாரி என்பது தெரியவில்லை. மிக விரைவில் மக்கள் மன்றத்தின் இது தெரிய வரும்.

அரசியல் சட்டம் தந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார் மோடி – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்திவிட்டோம். அதன் பின்னர் அனைத்து பயங்கரவாத தாக்குதல் நின்றுவிட்டன என பிரதமர் கூறினார். ஆனால் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட வாய்ச்சொல்லால் தீவிரவாத செயல்கள் அதிகரிக்கின்றன. இதற்கு பிரதமரிடம் எந்தவிதமான பதிலும் இல்லை. தற்போது புதிதாக ஒன்றை தொடங்கி உள்ளார். நான் ஒரு காவலாளி, நான் தான் இந்த நாட்டை பாதுகாக்க தகுதி படைத்தவன் என கூறுகிறார். சமீபத்தில் நமது விஞ்ஞானிகள், வின்வெளியில் செயலற்ற ஒரு கோளை அடித்து நொறுக்கினார்கள். இவ்வளவு நாள் தரையில் அடித்துக்கொண்டிருந்த நான், வானத்தில் சென்று எதிரிகளை வீழ்த்த தகுதி படைத்துவிட்டேன் என பிரமதர் கூறுகிறார்.

வானத்திலேயே காவலாளியாக வட்டமிட்டுக்கொண்டிருங்கள், அப்போது தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என நீங்கள் கூற வேண்டும். நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். எனவே, நீங்கள் அங்கேயே பாதுகாவலராக இருங்கள் என கூற வேண்டும், 5ஆண்டுகளாக தூங்கி விட்டு.. தற்போது புதுபுது கதைகள் வசனங்களை கூறி வருகிறார்.நாட்டின் உரிமையாளர்களாகிய நீங்கள் மீண்டும் வாய்ப்பு தரக்கூடாது என்றார் அவர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com