Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதியை எப்போதும் வழங்காது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதியை எப்போதும் வழங்காது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டிக்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் நகர தலைவர் சண்முகராஜ், ஒன்றிய தலைவர் ரமேஷ்மூர்த்தி, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திருப்பதிராஜா மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்பு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதியை எப்போதும் வழங்காது என்றும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வந்த போது முடியாது என்று கூறினார்கள், ஆனால் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாங்கள் செய்து கொடுத்தோம், மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுப்பது இயலாது என்று கூறினார்கள்.

இந்தியாவில் உயர்கல்வி படித்த அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் மூலமாக கல்வி கடன் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் இலவசமாக 10 ஆண்டுகாலம் கல்வி செலவு ஏற்கும் திட்டம் கொண்டு வந்த போது முடியாது என்றார்கள், ஆனால் நாங்கள் அந்த திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தினோம்,  மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவிக்கு மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி தான் தேவை, இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த வருமானம் ரூ 260 லட்சம் கோடி, இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்பது பெரிய தொகை கிடையாது எங்களால் கொடுக்க முடியும் என்றும், நாங்கள் சிந்தித்து, பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தான் இந்த முடிவினை எடுத்து உள்ளோம், காங்கிரஸ் இன்று நேற்று முளைத்த கட்சி கிடையாது,100 ஆண்டுகளுக்கு மேலான கட்சி, ஒரு உறுதிமொழி, தீர்மானத்தை எடுக்கும் நன்கு ஆலோசித்து விட்டு தான் எடுப்போம், நிச்சயமாக நாங்கள் செய்வோம்.

ஊழல் குறித்து வேறு யாரூம் குற்றம் சாட்டினாலும் பரவ இல்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளது வேடிக்கையானது. என்றும், இந்த ஊரில் கொள்ளையடிப்பது யார்? ஊழல் செய்வது யார் ?உலகத்திற்கே தெரியும், அவர்கள் எங்களை போய் சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது. தியகாத்தினால் பழுத்த இயக்கம் நாங்கள், பல்லாண்டு காலம் சிறைகளை அனுபவித்து சுதந்திரத்தினை வாங்கி கொடுத்தம்,இன்றளவும் எங்கள் தலைவர் காமராஜன் வாழ்க்கை திறந்த புத்தகம், அதே போன்று தான் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் திறந்த புத்தகமாக இருக்கிறோம்,அதிமுக தலைவர்களின் வாழ்க்கை தெரியும், ஊழல் குற்றச்சாட்டுக்காக யாருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்பது தெரியும், எனவே அவர்கள் மற்றவர்களை ஊழல் புரிந்துள்ளனர் என்று சொல்வது தவறு,எங்களுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு இஸ்லாமியர் ஒருவருக்கு சீட் வழங்க நினைத்து இருந்தோம், ஆனால் அவர் உடல் நிலை சரியில்லை என்று கூறியதால் வேறு ஒருவருக்கு வழங்க வேண்டி நிலை, இருந்தாலும் எங்களது கூட்டணியில் இந்தியயூனியன் முஸ்லீம் லீக்கிறக்கு ஒரு தொகுதி வழங்கியுள்ளோம் என்றார் அவர்.  

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!