74
திருச்சி லால்குடி அருகே பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்..
திருச்சி , கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது,பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சிவலிங்கம் என்பவரும் திண்டுக்கல் நோக்கி காரில் சென்ற போது காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
You must be logged in to post a comment.