Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..

by ஆசிரியர்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வாக்களிக்க வைப்பது தொடர்பாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய அடிப்படையான வசதிகள் குறித்தும் கலந்தாலோசனை செய்வதற்கான கூட்டம் இன்று (07.03.19) காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உயர்திரு.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார். கூட்டத்தில் TARATDAC சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

1. உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகில் குறைந்த உயரமுடைய நாற்காலி அமைக்கப்பட வேண்டும்.

2. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும்.

3. கண் பார்வையற்றவர்கள் மற்றும் இரண்டு கைகளும் இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களது உறவினர்களை மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகில் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும்.

4. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதியை அரசு சார்பில் ஏற்ப்பாடு செய்து தர வேண்டும்.

5. வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

6. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீல்சேர் வசதி செய்து தரப்பட வேண்டும்.

7. குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தர வேண்டும்.

8. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துக்சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட தேர்தல் அலுவலர்கள் அனைத்து கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்து நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், இந்த தேர்தலில் நூறு சதவீத மாற்றுத்திறனாளிகளையும் வாக்களிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மாற்றுத் திறனாளிகளில் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடாதவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்தவாறே 0451-1950 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அவர்களது வீட்டிற்க்கே வந்து ஆவணகளை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள இதற்கென பிரத்யோகமான செயலியை தேர்தல் கமிசன் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக துவங்கப்பட்ட PWD APP என்னும் செயலியை Play Store ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிரமமின்றி வாக்களிக்க அரசு செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி ஜனநாயக கடமையாற்றுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!